சில்லக்குடியில் தெரு நாய்கள் தொல்லை

சில்லக்குடியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது.
சில்லக்குடியில் தெரு நாய்கள் தொல்லை
Published on

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்களால் இரவு நேரத்தில் பொதுமக்களால் சரியாக தூங்க முடியவில்லை. இரவு நேரத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கால்நடைகளை கடித்து குதறுகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com