மதுரை புதிய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்பு

மதுரை ஆதீன மடத்தின் 293வது புதிய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
மதுரை புதிய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்பு
Published on

மதுரை,

மதுரை ஆதீன மடத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து, புதிய ஆதீனமாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய ஆதீனம் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

புதிய ஆதீனம் பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள அனைத்து தருமபுரம் ஆதீனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்று மதியம் மகேஸ்வர பூஜையும், இரவில் பட்டின பிரவேசமும், கொல்லுக்காட்சியும் நடக்க உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு, இளைய சன்னிதானமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை அருணகிரிநாதர் நியமித்தார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் 293வது ஆதீனமாக தேசிக பரமாச்சாரிய சுவாமிக்கு பட்டம் சூட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com