தமிழக ரெயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? - தெற்கு ரெயில்வே விளக்கம்


தமிழக ரெயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
x

காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நடக்கும் ரெயில்வே திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் நடக்கும், 10 ரெயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மட்டும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக ரெயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே கூறியிருப்பதாவது;

"நிதியை அடுத்த காலாண்டுகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. தெற்கு ரெயில்வேயில் நிதிப் பற்றாகுறை இல்லை. தேவைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது. தமிழ்நாடு, கேளராவிற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவே பயன்படுத்தப்படுகிறது." என்று தெரிவித்துள்ளது.

-

1 More update

Next Story