மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதா? - தமிழக அரசு சொல்வதென்ன..?

அரசு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு செல்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதா? - தமிழக அரசு சொல்வதென்ன..?
Published on

சென்னை,

பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, கோடை நிதி என்று கொடுத்த ரூ.5 ஆயிரத்தை, மறைமுகமாக தமிழக அரசு வசூலிக்கிறது என்றும், அரசு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு செல்வதற்கான கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது

பயணச் சீட்டுடன் உலா வரும் இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது பொதுமக்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அரசு போக்குவரத்துக்கழக ராஜபாளையம் கிளை மூலம், தடம் எண் 940ஏ' குளிர்சாதன பஸ் ராஜபாளையம்-திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன பஸ்சுக்குரிய பயண கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் பயண கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. சாதாரண பஸ்சில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டண உயர்வும் செய்யப்படவில்லை என்று மதுரை போக்குவரத்துக்கழக விருதுநகர் மண்டல உதவிமேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com