ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
x

இது பொதுவாக பயங்கரவாதம், பணமோசடி போன்ற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை,

ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் புதுவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணத்தை கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாம்பலம் ரெயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹவாலா பணம் என்பது, பண பரிவர்த்தனையை மறைமுகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ஆகும். இது ஒரு சட்டவிரோத பண பரிமாற்ற முறையாகும், இது பொதுவாக பயங்கரவாதம், பணமோசடி போன்ற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக பெண் உட்பட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நகை கடைக்கு பணத்தை கொண்டு செல்ல கடத்தி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story