சர்கார் படத்திற்கான மதுரை மாவட்ட திரையரங்குகளின் வசூல் விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

மதுரை மாவட்ட திரையரங்குகளில் சர்கார் படத்திற்கான தினசரி கட்டண வருவாய் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்கார் படத்திற்கான மதுரை மாவட்ட திரையரங்குகளின் வசூல் விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
Published on

மதுரை,

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு மதுரை மாவட்ட திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என புகார் எழுந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ரூ.50 முதல் ரூ.150 வரை உள்ள டிக்கெட்டுகள், ரூ.500 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டன என மகேந்திரபாண்டி என்பவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றிய வழக்கு விசாரணை இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்தது. இதில் நீதிபதிகள், கடந்த நவம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் திரையரங்குகளின் கட்டண வருவாய் பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com