

சென்னை,
தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி., துறைமுகம் அருகில், 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன், தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹெச். டி. ஹூண்டாய் நிறுவனம், 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனத்தின் எச்.டி., கே. எஸ். ஓ.இ., கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் துறையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டது. எச். டி., ஹூண்டாயின் முதலீட்டை தக்க வைக்க தமிழக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.
எச்.டி., கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகா மிட்டு இடங்களை ஆய்வு பார்வையிட்டு செய்தது.
எச்.டி., கே.எஸ்.ஓ.இ., நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையிலான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகாமிட்டு இடங்களை ஆய்வு பார்வையிட்டு செய்தது.
அக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, செயலர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக அந்நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.