“நடிப்பால் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்” - சிவாஜி கணேசனை நினைவுகூர்ந்த நயினார் நாகேந்திரன்

தமிழ் மொழியின் அழகையும், உணர்வுகளின் ஆழத்தையும் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் உலகறியச் செய்தவர்.
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது நாளையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நடிகர் திலகம்

நடிப்பின் மூலம் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, தலைமுறைகள் போற்றும் கலைச்சாதனைகளைப் படைத்த மாபெரும் கலைஞர் நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாள் இன்று!

தமிழ் மொழியின் அழகையும், உணர்வுகளின் ஆழத்தையும் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் உலகறியச் செய்தவர். அவரது கம்பீரமான குரல், வசன உச்சரிப்பு, முகபாவனை மற்றும் நடிப்பின் ஆழம் ஆகியவை இன்றளவும் கலைத்துறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.

இந்திய திரையுலகின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புகழும், கலைப் பங்களிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com