ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் - இருளப்ப சாமி

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்ப சாமி ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார்.
ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் - இருளப்ப சாமி
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பசாமி ஜீவ சமாதியடையப்போவதாக தகவல் பரவியது. இதைடுத்து அங்கு சுற்றுவட்டார பகுதி மக்கள் படையெடுத்தனர். இருளப்பசாமியை பார்க்க செல்லும் மக்கள், ரூபாய் நோட்டுகள், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி அவரை வணங்கினர்.தனக்கு அடுத்ததாக வாரிசு ஒருவரை சாமியார் நியமித்துள்ளார்.

மேலும் பாசாங்கரை என்ற கிராமத்தில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சாமியார் இருளப்பசாமியை உயிருடன் புதைக்க அனுமதிக்க மாட்டேம் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து "தந்தி டிவி"க்கு பேட்டியளித்த இருளப்பசாமி,

இரவு 12.05 மணிக்குள் தான் ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று தெரிவித்தார். தான் நேரடியாக லிங்கத்துடன் ஐக்கியம் ஆகி விடுவேன் என ஜீவசமாதி அடைய காத்திருக்கும் சாமியார் இருளப்ப சாமி தெரிவித்தார்.

தொடர்ந்து இன்று காலை (செப்.13) சாமியார் இருளப்ப சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இந்நிலையில், இன்று காலை 5.45 மணியளவில் ஜீவசமாதி முடிவை இருளப்ப சாமி ஒத்தி வைத்தார் மேலும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தில் விடிய விடிய நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. ஜீவசமாதி முயற்சி தவறு இல்லை, இருளப்பசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com