உசிலம்பட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 வயது சிறுமி பலி

எதிர்திசையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு பஸ்சில் மோதி, பின்னர் காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
உசிலம்பட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 வயது சிறுமி பலி
Published on

மதுரை,

மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்த முத்து இருளப்பன் (34) தனது மகள் ரியா ஸ்ரீ (5) உடன் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிக்கு காரில் சென்றிருந்தார். பின்னர் இருவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். உசிலம்பட்டி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிர்திசையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு பஸ்சில் மோதி, பின்னர் முத்து இருளப்பன் ஓட்டி வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் முத்து இருளப்பன் மற்றும் அவரது மகள் ரியா ஸ்ரீ ஆகியோர் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரியா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். முத்து இருளப்பன் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com