கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கூடலூர் அருகே ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுகாதார நிலைய மருத்துவர் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் அவசியம். உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டசத்து உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்பத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அயோடின் நுண்ணூட்ட சத்து அவசியம் அதுபோல நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், விட்டமின்கள் தேவைப்படுவதால் சிறு தானிய உணவுகள் கீரைகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் என்றார். பிரம்ம குமாரிகள் அமைப்பு நிர்வாகி ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com