ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக சுகாதாரத்துறை அதிகாரி கைது

தேசிய குழந்தைகள் நலத்திட்டப் பணிக்காக ‘பொலிரோ’ வாகனத்தை இயக்கி வருபவர் பாண்டீஸ்வரன்.
சுகாதாரத்துறை
Published on: 

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் (RBSK) கீழ் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனத்திற்கான வாடகைத் தொகையை விடுவிக்க ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய குழந்தைகள் நலத்திட்டப் பணிக்காக ‘பொலிரோ’ வாகனத்தை இயக்கி வரும் பாண்டீஸ்வரன், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான வாடகைத் தொகையாக தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.5,000 பெற வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தொகையை விடுவிப்பதற்காக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜெக வீரபாண்டியன் என்ற குணசேகரன் பணம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாண்டீஸ்வரன் தனது செல்போன் மூலம் ரூ.5,000 அனுப்பியதாகவும், பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com