சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடு
சுகாதார சீர்கேடு
Published on

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா தெற்கு பாரதிநகர் வ.உ.சி. தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் கடந்த சில வாரங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி கால்வாய்க்குள் தேங்கி சாக்கடையாக மாறி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், தஞ்சை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com