கூட்டேரிப்பட்டில் சுகாதார சீர்கேடு: திருமண மண்டப உரிமையாளருக்கு அபராதம்

கூட்டேரிப்பட்டில் சுகாதார சீர்கேடாக கிடந்தது தொடாபாக திருமண மண்டப உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கூட்டேரிப்பட்டில் சுகாதார சீர்கேடு: திருமண மண்டப உரிமையாளருக்கு அபராதம்
Published on

மயிலம், 

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே ஒரு திருமண மண்டபம் இயங்கி வருகிறது. இந்த மண்டபத்துக்கு அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு இருந்துள்ளது.

இதை அந்த வழியாக சென்ற, மாவட்ட கலெக்டர் மோகன், பார்த்தார். உடன் அவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து, அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, சம்பந்தப்பட்ட மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், குப்பையை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com