அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி 'ஆசிரியர் தின விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடுமுழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியையும், வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத்தந்து, மாணவச் செல்வங்களை பட்டைத் தீட்டிய வைரமாக ஒளிரச் செய்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அடித்தளமிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர்தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்களுடைய சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com