இஸ்லாமிய மக்களுக்கு இதயம் கனிந்த மிலாடி நபி வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்

இந்த இனிய திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை பெருக்கட்டும்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

இஸ்லாமிய மக்களுக்கு இதயம் கனிந்த மிலாடி நபி வாழ்த்துகளை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மிலாடி நபி திருநாளை முன்னிட்டு, நம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்களின் அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயப் பாதையை நம் வாழ்வில் பின்பற்றி, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோம்.

இந்த இனிய திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை பெருக்கட்டும். அனைவரது வாழ்விலும் அன்பும் அமைதியும் நிறைந்து, நம் சமூகத்தில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் என்றும் நிலைத்திடட்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com