செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!- சீமான்

மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என சீமான் பதிவிட்டுள்ளார்.
செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!- சீமான்
Published on

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி (இன்று) பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், செவிலியர்களை கவுரவிக்கும் வகையிலும், நோயாளிகளுக்கு செவிலியர்கள் செய்யும் சேவைகளை போற்றும் வகையிலும் 'உலக செவிலியர் தினம்' கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், உலக செவிலியர் தினத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக திகழ்ந்து, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலியத் தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com