12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் - எல்.முருகன்

எதிர்மறையான தேர்வு முடிவுகளை எதிர்கொண்டுள்ள மாணவர்கள் மறுதேர்வுகளை சந்தித்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் - எல்.முருகன்
Published on

சென்னை,

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று வெளியாகியுள்ள பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்வியின் மற்றொரு கட்டமான கல்லூரி நோக்கிச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய பல்வேறு துறைசார் கல்வி முறைகளானது, உலக அளவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை ஆராய்ந்து, அதற்கேற்ப உயர்கல்வி தேர்வு செய்து வாழ்வின் அடுத்தடுத்த வெற்றிகளை அடைய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

மேலும், எதிர்மறையான தேர்வு முடிவுகளை எதிர்கொண்டுள்ள மாணவர்கள் துவண்டு விடாமல், வரும் காலங்களில் நடைபெறும் மறுதேர்வுகளை சந்தித்து வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com