

சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வட தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்று சுகாதாரம், குடிநீர் வழங்கல் போன்ற அத்தியாவசிய பணிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முதியவர்கள், குழந்தைகள், முன்கள பணியாளர்கள், வெயிலில் பணி செய்பவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோர் இந்த காலகட்டத்தில் தகுந்த மருத்துவ அறிவுரையை பின்பற்ற வேண்டும் எனவும் வானிலை மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.