வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் கடும் தாக்குதல்

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் கடும் தாக்குதல்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே நடுக்கடலில் சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் வேதாரண்யம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் 25 பேர் 5 படகுகளில் அந்த வழியே வந்தனர்.

அவர்கள் வேதாரண்யம் மீனவர்களை தாக்கி, வாள்முனையில் மிரட்டி 500 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று கரை திரும்பியுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com