கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் மழை கொட்டித்தீர்த்தது.இதனால் அருவிகளில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்
Published on: 

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை இன்றி பகல் நேரத்தில் கடும் வெப்பமும், இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 10 மணி அளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழை மாலை 5 மணி வரைகொட்டித்தீர்த்தது. மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நட்சத்திர ஏரி பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

படகு சவாரி ரத்து

நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நக ரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி யது. ஏரியில் படகு சவாரி சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. பகல் முழுவதும் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கினர். இருப்பினும் கேரள மாநிலத்தி லிருந்து 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் வந்திருந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியே அனைத்து சுற்றுலா இடங்களையும் கண்டுகளித்தனர்.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் செண்பகனூர் அருகே உள்ள தரைப்பாலத்தின் கீழ்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. அதில் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்ட னர். தகவலறிந்த சமூக ஆர்வலரான பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அங்கு சென்றார். பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி நின்ற குப்பைகளை அகற்றவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

கழிவுகள் அகற்றம்

உடனே நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து பாலத்தின் கீழ்பகுதியில் இருந்த கழிவுகளை 5 மணிநேரம் போராடி அகற்றினர். அதில் இறந்து கிடந்த மாட்டின் உடல் தண்ணீரில் இருந்து அகற்றப்பட்டது. இத னால் கால்வாயில் மழைநீர் வழிந்தோடியது. அந்த வழியாக போக்குவரத்து சீரா னது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று பிரையண்ட் பூங்காவில் 39 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

X