மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு 2 வது நாளாக தடை

நெல்லையில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் மணிமுத்தாறு அருவில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சுற்றுலா பயணிகளுக்காக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலையில், மணிமுத்தாறு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story






