கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
Published on

சென்னை,

டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் டெல்லி விமான நிலையத்தில், விமானங்கள் தரை இறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com