சென்னையில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு

கோப்புப்படம்
சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது.
இந்நிலையில் சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 8.30 மணிக்கு பிறகே, விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புறநகர் முழுவதும் கடுமையான பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story






