வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகள், பொது இடங்களில் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா? சந்தேகப்படும் படியாக யாராவது உள்ளார்களா? என கண்காணிக்கப்பட்டது.

தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பா.ஜ.க., இந்து முன்னணி அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேலூர் கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com