சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

முன்னெச்சரிக்கை

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், ரெயில் வழித்தடங்கள், பஸ் நிலையங்கள்,சுதந்திர தின விழா நடைபெறும் இடமான கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலீசார் தொடர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் இந்த இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டும், ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டும் வரப்படுகிறது.

வாகன சோதனை

சந்தேக நபர்களை கண்காணிக்கும் பொருட்டு ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு ரோந்தை அதிகப்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு, சந்தேகப்படும்படியான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர, சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூர் ரெயில் நிலையம் வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கின்றனர். பயணிகளும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல் நடைமேடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரூர் அமராவதி ரெயில்வே பாலத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com