கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு...!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் நாளை நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு...!
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி, 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழைக் காரணமாக நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வுகள் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com