சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை
Published on

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. சென்னை பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர், பாடி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், கிண்டி, செங்குன்றம், மூலக்கடை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை கொட்டித் தீர்த்தது.

சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com