

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை, சென்டிரல், கோயம்பேடு, எழும்பூர், வண்ணாரப்பேட்டை, புரசவைவாக்கம், நுங்கம் பாக்கம், மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், விருகம்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர், பள்ளிக்கரணை , துரைப்பாக்கம் , மேடவாக்கம் ,ஈஞ்சம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், போரூர், மேடவாக்கம், கீழ்கட்டளை, கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த 24மணி நேரத்தில் ௧௩ இடங்களில் மிக கனமழை பதிவாகி இருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 19.5 செமீ மழை பதிவாகியுள்ளது . பள்ளிக்கரணை - 17.7 செமீ, மேடவாக்கம் -17 செமீ, பாரிமுனை -15.9 செமீ, மடிப்பாக்கம் - 15.7, ஈஞ்சம்பாக்கம் 14 செமீ மழை பதிவாகியுள்ளது .