கள்ளக்குறிச்சியில் பலத்த மழை

கள்ளக்குறிச்சியில் பலத்த மழை
கள்ளக்குறிச்சியில் பலத்த மழை
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து மழைபெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மழைபெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் மாலை 6 மணிவரை விட்டு விட்டு மழைபெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணி முதல் சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் தியாகதுருகம், சின்னசேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com