முத்துப்பேட்டை, வடுவூரில் கொட்டித்தீர்த்த கனமழை

முத்துப்பேட்டை, வடுவூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முத்துப்பேட்டை, வடுவூரில் கொட்டித்தீர்த்த கனமழை
Published on

தில்லைவிளாகம்,

முத்துப்பேட்டை, வடுவூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். விவசாயிகளும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.இந்தநிலையில் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆலங்காடு, உப்பூர், கோபாலசமுத்திரம், பள்ளியமேடு, கோவிலூர், தம்பிக்கோட்டை கீழக்காடு, மேலநம்மகுறிச்சி, கீழநம்மகுறிச்சி, மங்களூர் ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், தொண்டியகாடு, இடும்பாவனம், மேலவாடியகாடு, கீழவாடிய காடு, கற்பகநாதர்குளம், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை 1 மணி நேரம் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் கடையோரங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது.

வடுவூர்

இதைப்போல திருவாரூர் மாவட்டம், வடுவூரில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை வானில் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு வரை நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் நேரத்தில் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இரவு பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com