பெரியகுளத்தில் பலத்த மழை

பெரியகுளத்தில் பலத்த மழை பெய்தது.
பெரியகுளத்தில் பலத்த மழை
Published on

பெரியகுளத்தில் நேற்று காலை வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இருந்தன. இதையடுத்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் அந்த மழை நீடித்தது. மதியம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் மாலை 3 மணி அளவில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சாரலாக பெய்ய தொடங்கிய மழை திடீரென பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக பெரியகுளத்தில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com