திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

குலசேகரன்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை:  சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி
Published on: 

கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளான குலசேகரன்பட்டினம், உடன்குடி, மணப்பாடு, மாதவன்குறிச்சி, ஞானியார் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலையில் கனமழை பெய்தது.

கோவில் அருகில் தேங்கிய மழைநீர்

தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம், முத்தாரம்மன் கோவில் மற்றும் பிர தான சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. முத்தாரம்மன் கோவில் சன்னதி தெருவில் மழைநீர் தேங்கியதால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.குலசேகரன்பட்டினம் பகுதியில் மட்டும் 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கழுகுமலை, மெஞ்ஞானபுரம்

கழுகுமலையில் நேற்று காலை 8 மணி முதல் மாலை வரை சாரல் மழை பெய் தது. இதுதவிர வானரமுட்டி, நாலாட்டின்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி லும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மெஞ்ஞானபுரம், செம்மறிக்குளம், நங்கை மொழி, வேப்பங்காடு, அடைக்கலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து லேசானது முதல் கனமழை வரை பெய்து கொண்டே இருந்தது.இதேபோல் விளாத்திகுளம், எட்டயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

X