நெல்லை, தென்காசி பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடையநல்லூரில் மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
மழை
Published on

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக நெல்லையில் 105 டிகிரி வெயில் பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பகலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை வீட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். சாலையிலும் அனல்காற்று வீசியது.இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. மாலையில் சந்திப்பு பகுதியில் சாரல் மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.

மழை அளவு

விக்கிரமசிங்கபுரம், மானூர், ராமையன்பட்டி, திசையன்விளை, இட்ட மொழி, அம்பை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், மணிமுத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 8 மி.மீ., சேரன்மாதேவியில் 2.40 மி.மீ., மணிமுத்தாறு பகுதியில் 2.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது.

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

தென்காசி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடையநல்லூரில் மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டு சாலையில் வீடு கட்டுமான பணியில், புளியங்குடி டி.என்.புதுக்குடி தியாகராஜநகரைச் சேர்ந்த தொழி லாளி காசிராஜ் (வயது 42) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.இவர் வீட்டின் 2-வது மாடியில் நின்று வேலை செய்தபோது, திடீரென்று மின்னல் தாக்கியது.

இதில் உடல் கருகி கீழே விழுந்ததில் பலத்த காயம டைந்த காசிராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல் லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த காசிராஜிக்கு மனைவி மற் றும் 2 மகள்கள் உள்ளனர். இதேபோல் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், அச்சன்பு தூர், இடைகால், நயினாரகரம், வடகரை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக் களில் மழைநீர் தேங்கியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com