தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகியுள்ள நிலையில், அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும். இதேபோல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com