தமிழகத்தில் 7-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை

வளிமண்டல சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று முதல் வரும் 7-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் வங்கக் கடலில் இருந்து கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகம் காரணமாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு நிர்வாக ரீதியான தயார் நிலைக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளை கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com