கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
Published on

திண்டுக்கல், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பூங்கொடி அறிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com