கனமழை: கரூரில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை

கனமழை காரணமாக கரூரில் 1-8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை: கரூரில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்தநிலையில் இம்மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com