செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
Published on

சென்னை

சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதால், நீர்மட்டத்தை நீர்மட்டத்தை 22 அடிக்கும் கீழ் வைத்து கண்காணிக்கும் பொருட்டு மதியம் 2 மணி முதல் 500 கியூசெக் நீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு அளவு 24 அடி.

5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதகிலிருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய நீரால், அதனை ஒட்டிய குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 3307 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.ஏரிக்கு வினாடிக்கு 6200 கன அடி வீதம் நீர் வருகிறது

24 அடியை உச்ச நீர்தேக்கும் அளவாக கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 23.37 அடிக்கு தண்ணீர் உள்ளது

இதேபோன்று, புழல் ஏரியின் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கடலில் கலக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

சென்னை நகரத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது எதிர்பார்த்த 3.7 செ.மீ அளவை விட அதிகமாக இருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, தாராமணி, கேளம்பாக்கம், கோலப்பாக்கம் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பெய்தது, அம்பத்தூர், மகாபலிபுரம், தாமரைபாக்கம், ரெட் ஹில்ஸ் பகுதியில் 3 செ.மீ மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com