கனமழை; இன்று நடைபெறுவதாக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

முரசு புயலின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை; இன்று நடைபெறுவதாக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on: 

வங்கக் கடலில் தீவிரமடைந்துள்ள முரசு புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை காலைக்குள் ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. முரசு புயலின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது.

கனமழையால் இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

செய்முறைத் தேர்வுகள் உள்பட அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

X