கனமழை எச்சரிக்கை: கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Published on

கடலூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கனமழை எச்சரிக்கையை தெடர்ந்து கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தெடர்பாக கடலேர பகுதிகளில் மீன்வளத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com