கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது
கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளது . வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது . கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

X

Daily Thanthi
www.dailythanthi.com