பனப்பாக்கத்தில் இடி, மின்னலுடன் கன மழை

பனப்பாக்கத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
பனப்பாக்கத்தில் இடி, மின்னலுடன் கன மழை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென்று இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com