செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை

செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை
Published on

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று காலை முதலே வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பின்னர் மாலையில் வெயில் குறைந்து மேக மூட்டமாக மாறியது. மாலை 4.45 மணிக்கு லேசான மழை தூறியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. 5.30 மணி வரை சுமார் 45 நிமிடம் பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com