காஞ்சீபுரம், செங்கல்பட்டில் இடியுடன் பலத்த மழை

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் இடியுடன் பலத்த மழை
Published on

பலத்த மழை

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பின்னர் இடி, மின்னலுடன் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், ரங்கசாமிகுளம், மூங்கில் மண்டபம், பூக்கடைசத்திரம், செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, உத்திரமேரூர், வாலாஜாபாத், பாலுச்செட்டிசத்திரம் என மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் விவசாயிகளும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியடைந்தனர். மேலும் காஞ்சீபுரம் பஸ் நிலையம், ரங்கசாமி குளம், மேட்டுத்தெரு, செட்டித்தெரு, ரெயில்வே ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செங்கல்பட்டு டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆலப்பாக்கம், புலிப்பாக்கம், வில்லியம்பாக்கம், தென்மேல்பாக்கம், அம்மனம்பாக்கம், மனப்பாக்கம், மலையம்பாக்கம், பட்ரவாக்கம், பொருந்தவாக்கம், குன்னவாக்கம், சாஸ்திரம்பாக்கம், விஞ்சியம்பாக்கம், திருத்தேரி, பாரேரி, சென்னேரி, சாத்தனஞ்சேரி, கொளத்தாஞ்சேரி, தேனூர், பரனூர், பாலூர், ஆனூர், ஆப்பூர், அஞ்சூர், ஆத்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் ,இடியுடன் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது.

இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் இருசக்கர வாகன விபத்துக்கள் பல இடங்களில் நடந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com