

சென்னை,
'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மழை நீரில் செல்ல முடியாமல் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கின்றன. சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் அதிகனமழை பெய்துவருவதால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2600 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இன்று 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.