தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தாலும், வருகிற 10-ந்தேதி வரை பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஜன.06) நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் கூறினார். கடந்த 24 மணிநேரத்தில் சென்னை, மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com