

திருச்சி,
தமிழகம் முழுவதும் கனமழையால் திரும்பிய பகுதிகளிலெல்லாம் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. கனமழையால் இன்று (நவம்பர் 29) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திருச்சியில் கனமழையால் வீடு மற்றும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில், வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் படகு ஒன்றில் வைத்து அழைத்து வந்தனர்.