தொடர் கனமழை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on

சென்னை,

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. அதன்பிறகும் அடங்காத மழை இரவிலும் நீடித்தது. இதனால், கன்னியாகுமரி வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது கன்னியாகுமரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெய்து வரும் தொடர் கனமழை கரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (நவம்பர் 15) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com