கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 26) விடுமுறை அளித்து அந்த மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com